• May 19 2024

உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது... பாலியல் தொல்லை குறித்துப் பொங்கி எழுந்த பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் அடிக்கடி நடிகர், நடிகைகள் மத்தியில் பாலியல் வன்முறை குறித்த சர்ச்சைகள் எழுவது வழமை. அந்தவகையில் மலையாள பட உலகிலும் இவ்வாறான பாலியல் தொல்லைகள் இருப்பதாகவும், பட வாய்ப்பு அளிக்க எனக் கூறி படுக்கைக்கு அழைக்கின்றனர் என்றும் நடிகைகள் சிலர் ஏற்கனவே புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். 

இந்த தொல்லைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் முகமாக மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரேவதி, பார்வதி உள்ளிட்டோர் இணைந்து பெண்கள் பாதுகாப்பு சங்கம் ஒன்றினைத் தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா சாடி உள்ளார். 


சுவாசிகா தமிழில் 'கோரிப்பாளையம், மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது மலையாளத்தில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். அந்தவகையில் சுவாசிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.


அதில் அவர் கூறுகையில் ''மலையாள திரையுலகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. இங்கு பெண்களை படுக்கைக்கு யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை. பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றால் தைரியமாக நிராகரிக்கலாம். அதன்பிறகு யாரும் வற்புறுத்தமாட்டார்கள்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் "இரவு யாரேனும் உங்கள் அறைக்கதவை தட்டினால் நீங்கள் திறக்காமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. மீறி ஏதேனும் மோசமான அனுபவம் நேர்ந்தால் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது மகளிர் ஆணையத்திலோ புகார் செய்யலாம். சினிமா பெண்கள் நல அமைப்பில் புகார் செய்ய தேவை இல்லை. அந்த அமைப்பின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதி இல்லை" என்று அந்த அமைப்பை குறை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement