• Apr 23 2024

யோகி பாபுவிற்கு கிரிக்கெட் மட்டையை பரிசளித்த விஜய்... அடேங்கப்பா அதன் விலை இவ்வளவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். அத்தோடு யோகிபாபு காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.


அந்த வகையில் யோகிபாபு நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான 'மண்டேலா' படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மடோன் அஸ்வின் பிரமாண்டமாக இயக்கிய இப்படத்தில் யோகிபாபு சலூன் கடை நடத்தி வருபவராக நடித்திருந்தார். 

இப்படத்தினைத் தொடர்ந்து 'பொம்மை நாயகி' மற்றும் 'மலை' ஆகிய படங்களிலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் யோகிபாபு. இவை தவிர துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத்தும் யோகிபாபுவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வரும் யோகிபாபு, கிரிக்கெட் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அதாவது ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவரின் கிரிக்கெட் திறமையை பல நாட்களாக சைலண்டாக கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார்.


விஜய் கொடுத்த அந்த பேட்டை கையில் பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்து விஜய்க்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார் யோகிபாபு. இந்நிலையில் அந்த பேட்டின் விலையை தற்போது ரசிகர்கள் தேடிப் பிடித்துள்ளனர். தேடி பிடித்தது மட்டுமல்லாமல் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளஙல்களில் நெட்டிசன்கள் பதிவிட்டும் வருகின்றனர். 


அந்தவகையில் அந்த கிரிக்கெட் பேட்டின் விலை ரூ.10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement