• May 12 2024

எத்தனை கோடி ஆஃபர் கொடுத்தாலும் இந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்- நடிகர் சிம்பு எடுத்த அதிரடி முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் சிம்பு ஹன்சிகா நடிப்பில் வெளியாகியிருந்த மஹா திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிராமத்து நாயகனை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு குறித்த ஒரு சுவாரஸ்சிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் நடிக்க சிம்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.


அதாவது ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்களது விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் கொடுத்துள்ளனர். ஆனால் சிம்பு ஒப்புக்கொள்ளவில்லையாம். பிரபல பாலிவுட் நடிகர்கள் பல மதுபான விளம்பரங்களில் நடித்த சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த தலைவலியே தனக்கு தேவையில்லை என சிம்பு ஒதுங்கி கொண்டாராம்.

மதுபான விளம்பரங்களில் தான் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறி இருப்பது பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. அத்தோடு ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை சிம்பு கைவிட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், மதுபான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement