• May 05 2024

புஷ்பா 2 படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட்- அடடே சூப்பர் நியூஸ்ஸாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த வருடம் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இப்டம் பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியிருந்தது.


சந்தன மக்கட்டை கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்ததோடு பஃகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார்.


அத்தோடு இப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்லுறியா மாமா..... ,ஸ்ரீ வள்ளி.... ,சாமி சாி.... ஆகிய பாடல்கள் யாவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி புஷ்பா2 படத்தில் பூஜை நாளைய தினம் நடைபெறவுள்ளதாம். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாம் எனக் கூறப்படுகின்றது. இதனால் இப்படம் விரைவில் ரிலீஸாகும் எனவும் நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement