• Sep 27 2023

முதன் முறையாக டிவி சீரியலில் களமிறங்கிய 'நீயா நானா' கோபிநாத்... வெளியானது 'Eeramaana Rojaave-2' promo video..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜீவா ப்ரியாவிடம் "நம்ம ஹோமிற்கு பெரிய ஒரு VIP வாறார்" எனக் கூறுகின்றார். அதாவது 'நீயா நானா' கோபிநாத் தான் வருகின்றார். அவரைக் கண்டதும் ஜீவா கட்டியணைத்து வரவேற்கின்றார்.


மேலும் ப்ரியாவும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றார். சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அந்த ஹோமில் பேசிய கோபிநாத் "ஒரு கூட்டுக் குடும்பம் சரியுது என்றால் அதுக்கு மருமகள் தான் காரணம் என்று நாம முடிவிற்கு வர முடியாது, ஒரு தனிக் குடும்பத்தில் இருந்து கிடைக்கக்கூடிய முடிவெடுக்கும் அதிகாரம், சுதந்திரம் இப்படிப் பல விடயங்கள் இதை எல்லாத்தையும் எதிர்பார்க்கிற பெண்ணுக்கு, ஒரு கூட்டுக் குடும்பத்தை கொடுத்திருந்தால், அவரின் கணவர்மார் அதை செய்து கொடுத்திருந்தால் அவங்க ஏன் தனிக் குடித்தனம் போகணும் என்று நினைக்கணும்" என பேசுகின்றார்.


இதனை கேட்டதும் ஜீவா தலை குனிந்து நிற்கின்றார். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement

Advertisement