• Dec 19 2025

இந்த வாரம் வெளியேற போகும் மிக்சர் பார்ட்டிகள்... பிக் பாஸ் விட்டு யாருபோகப் போறாங்க தெரியுமா?

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு 2 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். அந்த வகையில் இந்த வாரமும் ஒரேடியாக இரண்டு பேரை வெளியே தள்ளிவிடலாம் என பிக்பாஸ் குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.


அதன்படி இந்த வாரம் மிக மிக குறைவான ஓட்டுகளை பெற்ற ஜோவிகா வீட்டை விட்டு வெளியேறுகிறார். தன் மகளை த்ரிஷா, நயன்தாரா ரேஞ்சுக்கு ஹீரோயினாக்க வேண்டும் என்பதுதான் வனிதாவின் மிகப்பெரிய திட்டம்.


அதனாலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் அவரை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் ஜோவிகா தன் திறமையை காட்டாமல் சதா நேரமும் தூங்கியே பொழுதை கழிக்கிறார்.


அது மட்டுமின்றி மட்டு மரியாதை இல்லாமல் பேசி ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். அதனாலேயே அவருக்கு ஓட்டுக்களும் கிடைக்கவில்லை. இதனால் பயந்து போன வனிதா விஜய் டிவியிடம் மகளை எவிக்ட் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதோடு சில டீலிங்கையும் பேசினாராம்.


அதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இன்னொரு வேஸ்ட் பீசும் வெளியேற உள்ளது. அதன்படி செட் ப்ராப்பர்ட்டி போல் இருக்கும் டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் தான் அந்த இன்னொரு பலியாடு. இப்படி மிக்சர் பார்ட்டிகள் அனைத்தும் காலியாவதால் இனி வரும் காலங்களில் போட்டிகளும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement