• Apr 27 2024

‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு... ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸாக வந்த நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.


மேலும் இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

இந்நிலையில் மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்  இணைந்து தயாரித்து உள்ளனர்.


இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் அனுபவ நடிகர்களான சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம்கேர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கனெக்ட் வெறும் 99 நிமிடம் ஓடக்கூடிய திரில்லர் படமாகும். நீளம் குறைவாக உள்ளதன் காரணமாக இப்படத்தை திரையரங்குகளில் இடைவெளி இன்றி திரையிடப்பட உள்ளது. மேலும் கனெக்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.


இந்நிலையில், கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து கலந்துகொண்டார். இவர்களுடன் ஏராளமான திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement