• Jan 19 2025

நீங்க எழுதுற கதை, வசனத்துக்கு என் பொண்ணு நடிக்க மாட்டா..! சட்டென ஜோசப்பை மடக்கிய மரியம்! வரிந்து கட்டி நின்ற ஜெனி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரூம் கதவை திறந்து பார்த்தபோது ஜெனியும் செழியனும் கட்டிப்பிடித்தவரே நிற்கிறார்கள். இதை பார்த்த பாக்கியாவும், மரியாவும் சந்தோஷத்தில் கண் கலங்குகிறார்கள்.

வெளியே வந்த ஜெனி, செழியனிடம் இப்போ என்ன முடிவு எடுத்து இருக்கீங்க என எழில் கேட்க, அதற்கு இருவரும் அமைதியாகவே இருக்கிறார்கள். பிறகு நானே சொல்றேன் என எழில்,  ஜெனி நீங்க நம்ம வீட்டுக்கு வர போறீங்க அதானே என்று கேட்க, கொஞ்ச நேரம் கழித்து ஆமாம் என தலையாட்டுகிறார் ஜெனி. இதனால் எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள. செழியன்பாக்கியாவை கட்டிப்பிடித்து நன்றி சொல்லுகிறார். ஜெனியும் அம்மாவை கட்டிப்பிடிக்க அவர் ஆசிர்வாதம் பண்ணுகிறார்.

அதன் பிறகு ஜெனிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகவா? என்று பாக்கியா கேட்க, ஜோசப் கிட்ட சொல்லாம தான் வந்தேன். வீட்டுக்கு போய் அவர்கிட்ட சொல்லிட்டு போங்க என்று மரியம் சொல்லுகிறார். எழில் அவர் கோபப்படுவார் என்று சொல்ல, அதை நான் பார்த்துகிறேன் என மரியம்  சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து எல்லாரும் கிளம்பி ஜெனி வீட்டுக்கு வர, எல்லாரும் ஒன்றாக வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் ஜோசப். மேலும் செழியன் குழந்தையுடன் இருக்க நீ எதுக்குடா இங்க வந்த குழந்தையை ஏன் நீ வச்சு கொண்டிருக்க என்று குழந்தையை பறிக்க போக, மரியம்  தடுத்து நிறுத்துகிறார்.

அதன் பின்பு நாங்கள் சர்ச்சுக்கு போகல ஜெனியையும்  செழியனையும் தனியா பேச வைக்கத்தான் போயிருந்தோம் என்று சொல்ல ஜோசப் கோபப்படுகிறார். மேலும் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விட்டது என பாக்கியா  சொல்ல அதிர்ச்சி அடைகிறார் ஜோசப்.

அதெல்லாம் தீரவே தீராது நீங்க நடத்துற நாடகத்துக்கு என் பொண்ணு நடிக்க மாட்டா என ஜோசப் கோபப்படுகிறார். ஆனாலும் அவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துட்டாங்க,  முடிவு எடுத்து இருக்காங்க என்று மரியம் சொல்ல, ஜெனியும் ஆமாம் டாடி செழியனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு பண்ணிட்டேன் என சொல்லுகிறார்.

ஆனாலும் இந்த வாழ்க்கை வேண்டாம் என்று ஜோசப் சொல்ல,செழியன் தப்ப உணர்ந்துட்டாரு என சொல்ல, ஜோசப் அதெல்லாம் சரி வராது என்று சொல்கிறார். அதற்கு மரியம், யாருமே தப்பு பண்றது இல்லையா? ஏன் நீங்க தப்பு பண்ணலையா? என கேட்க,  ஒன்னும் பேச முடியாமல் உன் உள்ளே சென்று விடுகிறார் ஜோசப்.

இன்னொரு பக்கம் முன்ன மாதிரி இருக்காத. செழியன்  எங்க போறான் வாரான் என்று கவனமா பாத்து இரு. இன்னொரு முறை இந்த மாதிரி பிரச்சினை வரக்கூடாது என்று மரியம்  அறிவுரை கூறுகிறார்.

மறுபக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு போகல ரெண்டு பேரையும் கூட்டிட்டு ஜோசப் வீட்டுக்கு தான் போயிருப்பா என  ஈஸ்வரி சொல்ல,  இந்த பாக்கியா இப்படித்தான். தப்பு மேல தப்பு பண்ணிட்டே இருக்கா. அவளை மட்டும் கண்ட்ரோல் பண்ணவே முடியல என கோபி புலம்புகிறார். அதற்கு ராதிகா அவங்க அப்படி தப்பா எதுவும் பண்ண மாட்டாங்க. அவங்க அவங்களோட பையனோட தான் வெளிய போய் இருக்காங்க என பாக்கியாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.


Advertisement

Advertisement