• Aug 02 2025

சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்களுக்கு கிடைத்த வெற்றி...! வெளியான தேசிய விருது பட்டியல்..!

Roshika / 12 hours ago

Advertisement

Listen News!

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகள் பட்டியலில் பல முக்கியமான திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன. மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த ‘உளொழுக்கு’ (2018ல் நடந்த நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது) சிறந்த மலையாள திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமூக பின்னணியில் நிகழும் உணர்வுப்பூர்வமான கதையை ஊடறுக்கும் விதத்தில் எடுத்துக்காட்டியதற்காக இப்படத்திற்கு உயரிய பாராட்டு கிடைத்துள்ளது.


அதேபோல், வெளியான தருணத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு இரண்டு முக்கியமான தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த இயக்குனராக  தோஷி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார், மேலும் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதும் இப்படத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான கருத்துப் பேதங்கள் இருந்த போதிலும், தொழில்நுட்ப ரீதியில் அளித்திற்கான அங்கீகாரம் என இது பார்க்கப்படுகிறது.


மற்றொரு முக்கியமான படம் ‘அனிமல்’ – சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதுகளை வென்றுள்ளது. சந்து மோஹன் இசையமைப்பில் படம் இசையடிப்படையில் தனி முத்திரை பதித்திருக்கிறது. தொழில்நுட்ப நுணுக்கங்கள், கதையின் அழுத்தம் ஆகியவையால் பாராட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement