• May 01 2024

நாக சைதன்யா-வெங்கட் பிரபு திடீர் மோதல்... தீர்ப்பு சொல்லி சமாதானப் படுத்திய பிரேம்ஜி.. தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது 'கஸ்டடி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக சமந்தாவின் முன்னாள் காதலனும், கணவனுமான நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் வாயிலாக இவர் தமிழிலும் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 


இந்நிலையில் நாளை ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து 'கஸ்டடி’ படக்குழுவினர் நேற்றைய தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


அந்த வீடியோவில் சிஎஸ்கே ஜெர்சியை வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் ஜெர்சியை நாக சைதன்யாவும் அணிந்துள்ளனர். அதில் அவர்களுக்கிடையில் இடம் பெற்ற உரையாடலில் சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என்று வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் அணி தான் வெற்றி பெறும் என்று நாக சைதன்யாவும் என மாறிக் கூறிக் கொள்கின்றனர்.


இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட இந்த மோதலை தடுக்கும் வகையில் பிரேம்ஜி பஞ்சாயத்து செய்ய வருகின்றார். அவர் வெங்கட் பிரபுவிடம் "நடராஜ் விக்கெட் எடுத்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா" என்று கேட்கின்றார். அதற்கு அவர் "ஆம் சந்தோஷப்படுவேன்" என்று கூறுகிறார். 


இதன் பின்னர் நாக சைதன்யாவிடம் "தோனி சிக்சர் அடித்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா?" என்று கேட்கின்றார். அதற்கு அவரும் "ஆம் சந்தோஷப்படுவேன்" என்று கூறினார். இதனையடுத்து இது சிஎஸ்கே வெர்சஸ் ஹைதராபாத் அல்ல, சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத், ஏனெனில் 'கஸ்டடி' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது என்று கூறுகிறார்.


இவர்களின் இந்த புரமோஷன் வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement