• May 09 2024

என்னோட தங்கச்சி சொல்லிச்சு இது தான் எங்களுக்கு சொர்க்கம் - பெண்கள் குறித்து எமோஷனலாக பேசிய சூர்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!


கடந்த சில நாட்களுக்கு முதல் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் விருமன். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியிருந்ததோடு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, ஆர் கே சுரேஷ், மனோஜ் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.


இந்த நிலையில் நேற்றைய தினம் விருமன் படத்தின் சக்ஸஸ் மிட் நடந்தது. அதில் 2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது

விருமன் படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக இப்படம் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது. இதனால் வீட்டிற்கு போகவும் முடியாதல் தொழில் நுட்பக் கலைஞர்கள் நன்றாக வேலை செய்தார்கள். அவர்கள் இல்லாமல் 2டி நிறுவனம் இல்லை என அவர்களை அழைத்து கௌரவப்படுத்தினார்.

மேலும் எங்களோட சக்ஸஸிற்கு பின்னுக்கு எங்க வீட்டில இருக்கிற பொண்ணுங்களும் காரணம் பொதுவாக ஒரு பெண் ஜெயிக்க வேண்டும் என்றால் ஆண்களை விட 10 மடங்கு கஷ்டப்படணும். என்னோட தங்கச்சி சொல்லிச்சு நாம சாப்பிட்ட தட்டை வேற யாராவது கழுவினால் அது தான் எங்களுக்க சொர்க்கம் என்று கூறினார்.

பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுக்கணும் அவங்களுக்கான ஸ்பேஷையும் கொடுக்கனும் என்று எமோஷ்னலாக பேசி இருக்கிறார்.











Advertisement

Advertisement

Advertisement