• Apr 03 2025

மும்பை ரெட் லைட் ஏரியாவுக்கு போன மிருணாள் தாக்கூர்.. கொஞ்சம் ஓவராத்தான் ரிஸ்க் எடுக்கிறாரோ?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

’சீதாராமம்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற மிருணாள் தாக்கூர் சமீபத்தில் மும்பையில் உள்ள ரெட் லைட் ஏரியாவுக்கு சென்றதாகவும் அங்கு அவர் ரிஸ்க் எடுத்து செய்த சில செயல்களை கேள்விப்பட்டு பாலிவுட் திரை உலகினர் ரொம்ப ஓவரா தான் ரிஸ்க் எடுக்கிறார் என்று கமெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. 

தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகை மிருணாள் தாக்கூர் என்பதும் அவர் ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்த நிலையில் அந்த கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்தது என்பதும், அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சமீபத்தில் வெளியான ’ஹாய் நானா’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார் என்பதும் அந்த படமும் நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ’ஃபேமிலி ஸ்டார்’ மற்றும் ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வரும் நிலையில், அவர் தனது பாலிவுட் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்து வருவதால்  நிஜமாகவே மும்பை ரெட் லைட் ஏரியாவுக்கு சென்று அங்கு உள்ள பாலியல் தொழிலாளர்களுடன் பேசி அவர்களுடன் பழகியதாக தெரிகிறது. 

அப்போதுதான் பாலியல் தொழிலாளர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பதை கேட்டு துடிதுடித்து போய்விட்டதாகவும், நமக்கு இருக்கும் வேதனை, துன்பமெல்லாம் எதுவுமே இல்லை, அவர்களது வாழ்க்கை மிகவும் கொடுமையானது என்று பதிவு செய்துள்ளார். 

இந்த கேரக்டர் அச்சு அசல் ஒரு விலைமாது போலவே வர வேண்டும் என்பதற்காக அவர் பல விஷயங்களை பாலியல் தொழிலாளர்களிடம் இருந்து உள்வாங்கி இருப்பதாகவும் இதனால் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement