• Mar 25 2023

“மிஸ் யூ அண்ணா.. ஐ லவ் யூ அண்ணா..” மயில்சாமியின் இழப்பை தாங்காது வீடியோ பதிவிட்ட நடிகர் சதீஸ்

Jo / 1 month ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாக சிவராத்திரி அன்று , சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பிய போது  ( பிப்ரவரி 19 ) அதிகாலை காலமானார். 

இதனிடையே நடிகர் மயில்சாமி இறந்ததிலிருந்து அவருக்கு நெருக்கமான பல நடிகர்கள் அவர் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை அவரின் நினைவாக பகிர்ந்து வருகிறார்கள் .

அந்த வகையில் காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் ஒரு வீடியோவினை பகிர்ந்திருக்கிறார். அதில் நடிகர் மயில்சாமி Inspection என்ற வார்த்தையை சொல்லுவதற்கு போராடி வருவதை காண முடிகிறது .இதற்கு நடிகர் விவேக் இன்ஸ்பெக்டர் சொல்றீங்க தானே அதே மாதிரி தான் இதுவும் ஈஸி  தானே சொல்லுங்க அப்படி என்கிறார் 

கடைசியில் ஒரு வழியாக  Inspection என்ற ஒரு வார்த்தையை சரியாக சொல்லுகிறார். 

இந்த வீடியோவை மிஸ் யூ அண்ணா ...ஐ லவ் யூ அண்ணா ..என்று சொல்லி ரொம்ப வருத்தத்துடன் நடிகர் சதீஷ் டுவிட்டரில் பகிர்ந்திருக்காரு . 

 இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது .பார்ப்பவர்கள் தங்கள் வருத்தத்தை கமெண்ட் செய்து தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement

Advertisement