• Apr 25 2024

முக்கிய புள்ளியின் சம்மந்தியா மயில்சாமி? யாரென்று பாருங்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர்.

இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில்  மயில்சாமி மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மயில்சாமியின் மூத்த மகன் அன்பு, சினிமாவிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த அல்டி என்கிற திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மயில்சாமியின் இளைய மகன் பெயர் யுவன். இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் யுவன். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார். 

மயில்சாமியின் மகன் அன்புவுக்கும் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .

இந்த திருமணத்தில் பல திரை துறை பிரபலங்கள் மற்றும் திமுக பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர். என்னதான் எம் ஜி ஆர் தீவிர பக்தன். ஆ தி மு கவின் தீவிர தொண்டன், சிவ பக்தரான இருந்தாலும் மயில்சாமி தனது மகனுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement