• Sep 22 2023

மேகாவை ஓங்கி அடித்த லட்சுமி... உண்மையை உளறிக் கொட்டிய மகேந்திரன்... அதிர்ச்சியில் உறைந்து போன மேகா... 'Chellamma' Promo Video..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக  ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா. கணவனால் கைவிடப்பட்ட பெண் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. சீரியலின் கதைப்படி மேகா சொத்து முழுவதையும் தன்னுடைய அம்மாவின் பெயரில் இருந்து மாற்றியெழுதி வாங்கி விட்டார்.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் மேகா "என்னப்பா என்னிடம் ஏதோ பேசணும் என்று அவசரமாக வர சொன்னீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு மகேந்திரன் நீ என்னை இனிமேல் உன் வாயால என்னை அப்பா என்று கூப்பிடாதை அந்தத் தகுதியை இழந்திட்டாய் என்கிறார். 


அதுமட்டுமல்லாது முதலில் சொத்தை லட்சுமி பேருக்கு மாற்றி எழுது எனவும் கூறுகின்றார் மகேந்திரன். பதிலுக்கு மேகா "இதில என்ன தப்பு இருக்கு, நான் எனக்கு வர வேண்டிய சொத்தை தானே எழுதி வாங்கினேன்" என்கிறார். அதைக் கேட்டதும் உடனே லட்சுமி மேகாவை ஓங்கி அறைகின்றார். லட்சுமியின் கையைத் தடுத்த மேகா "இதற்கு அப்புறமாக என்மேல் ஒரு அடி விழுந்திச்சு என்றால் வேற மாதிரி ஆகிடும் " என்கிறார். 


பதிலுக்கு மகேந்திரன் "பார்த்தியா இவளுக்கா பரிதாபப்பட்டாய், இவள் ஒண்ணா நம்பர் பிராடு, முதலில் சொத்தை லட்சுமி பேருக்கு மாத்தி எழுது" எனத் திட்டுகின்றார்.  அருகில் இருந்தவர் "மேகா உங்க பொண்ணு தானே பிறகு என்ன" எனக் கேட்க, என் பொண்ணு இல்லை என்ற உண்மையை கூறுகின்றார் மகேந்திரன். 


Advertisement

Advertisement

Advertisement