• May 02 2024

படு மோசமான செயலில் ஈடுபடும் மீரா ஜாஸ்மின்... இந்த வயசிலும் இது தேவைதானா..? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் மட்டுமன்றி மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார். இவரின் சேட்டையான நடிப்பிற்கு பின் இருக்கும் ரசிகர்கள் கூட்டமோ ஏராளம். 

அதிலும் குறிப்பாக இவரின் நடிப்பில் உருவான 'ரன்', 'சண்டைக்கோழி' ஆகிய ஹிட் படங்கள் இன்றும் நம்மில் பலரால் மறக்க முடியாது.


கேரளாவைச் சேர்ந்தவரான மீரா ஜாஸ்மின் 2014-ஆம் ஆண்டு 'அனில் ஜான்' என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். திருமணத்தினைத் தொடர்ந்து வேறு எந்த திரைப்படங்களிலும் பெரும்பாலும் நடிக்காத இவர் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். 

அதிலும் குறிப்பாக திருமணத்திற்கு பின் விடிவி கணேஷ், சந்தானம் ஆகியோருடன் இவர் நடித்த 'இங்க என்ன சொல்லுது' என்ற படத்தில் கூட தன்னுடைய இயல்பான நடிப்பினையே வெளிப்படுத்தி இருந்தார்.


தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின் பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்தவகையில் தற்போதும் படு மோசமான உடையணிந்து தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களுக்கு வேறு வேலை இல்லையா..?. இந்த வயசிலும் இது தேவைதானா..?" எனக் கேட்டு விமர்சித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement