• May 03 2024

திருமணத்திற்கு முதல் நாளில் பிரபல இயக்குநருக்காக மீனா எடுத்த ரிஸ்க்- அடடே ரொம்ப ஆர்வம் மிக்கவங்களா?

stella / 10 months ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் மீனா. அதன் பின்னர்  தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதற்கு பின்னர் ஏகப்பட்ட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்ததை அடுத்துதமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா.மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். 


 வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை தேற்ற இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில் மீனா திரையுலகில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு மீனா 40 என்ற நிகழ்ச்சியை தனியார் ஊடகம் ஒன்று நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், பாக்யராஜ், ராஜ்கிரண், சேரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா, ரோஜா, பிரசன்னா, சினேகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


இந்த நிகழ்ச்சிகாக இரண்டு மணி நேரத்திற்கு மீனாவுக்கு பத்து லட்சம் ரூபாய்வரை கொடுக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடியது .நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சேரன் பேசுகையில், "பொற்காலம் படத்தில் மீனா நடித்தபோது அவரது பிறந்தநாளை கருவேலங்காட்டில் வைத்து கொண்டாடினோம்.அதை அவர் மறக்கமாட்டார். அதேபோல் பொக்கிஷம் படத்தை எடுத்தபோது பத்மப்ரியாவுக்கு யாரை டப்பிங் பேச வைக்கலாம் என யோசித்து ஆடிஷன் வைத்தேன். யார் பேசியதும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.ஏனென்றால் படம் முழுக்க முழுக்க கடிதத்தை சம்பந்தப்பட்டது. எனவே தமிழை மிக அழகாக பேச வேண்டும்.

அந்த சமயத்தில் நடிகை மீனா என் நியாபகத்துக்கு வந்தார். சரி அவரிடம் கேட்கலாம் என நினைத்தபோது ஒன்று எனக்கு தோன்றியது. அது என்னவென்றால் இரண்டு நாள்களில் அவருக்கு திருமணம். இந்த சமயத்தில் கேட்டால் திட்டுவாரோ என யோசித்தே அவரது அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அவர் ஃபோனை மீனாவிடம் கொடுத்துவிட்டார். அவரிடமும் விஷயத்தை சொன்ன பிறகு எங்கே சேரன் டப்பிங் என கேட்டுவிட்டு நாளை திருமணத்தை வைத்துக்கொண்டு இன்று மாலை வந்து முழு படத்துக்கும் டப்பிங் பேசிக்கொடுத்துவிட்டு சென்றார். அவர் அப்படி செய்வதற்கு ஒரே காரணம் மீனா ஒரு கலை காதலர்" என்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement