• Apr 30 2024

பிக்பாஸ் சீசன் 7 இல் கலந்து கொள்ளவுள்ள மௌனராகம் சீரியல் நடிகை- அடடா.... இவரா?- அதை யாரும் எதிர்பார்க்கலையே..

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக பிக்பாஸ் 7வது சீசன் தொடங்க இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் 2வது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் எனக் கூறப்படுகின்றது.

இந்த சீசனில் இந்த முறை இரண்டு வீடுகள் புதிதாக வரப்போகின்றது. அத்தோடு கமல்ஹாசனுடன் இணைந்து பெண் தொகுப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்றும கூறப்படுகின்றது.


6வது சீசனிற்கு ரூ. 70 கோடி வரை சம்பளம் வாங்கி கமல்ஹாசன் இந்த முறை ரூ. 130 கோடிக்கு சம்பளம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.எனவே பிக்பாஸ் 7வது படு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் இதில் விஜய் டிவி தொகுப்பாளரான மாகாபா ஆனந்த், நடிகை கிரண் எனப் பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. இதனை அடுத்து தற்பொழுது மௌனராகம் சீரியல் நடிகை ரவீனாவும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement