• Apr 27 2024

leo படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். அத்தோடு இப்படத்தின் போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் தீவிரமாக இடம் பெற்று வருகின்றன. இப்படமானது அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் தன்னுடைய அடுத்த படத்தின் கலந்துரையாடலுக்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் வெளிநாட்டுககுச் சென்றுள்ளார்.அமெரிக்காவில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்தோடு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே நடைபெறும் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.மலேசியாவில் நடத்தலாம் என்ற முடிவெடுக்கப்பட்டது. பின் தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையிலேயே செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அந்தப் பாடல் வெளியாகலாம் என்றும் இந்தப் பாடலை அனிரூத் பாடியிருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது எஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement