• Jan 19 2025

அரசியல் மேடை ஏறியதும் மன்சூர் அலிகானின் வினோத செயல்! குப்பை பெருக்கியே 10 சொல்யூஷன் சொல்லிட்டாரே!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் காமெடி நடிகராகவும் நடித்து பட்டையை கிளப்பி வந்த மன்சூர் அலிகான், தற்போது ஜனநாயக  புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

அண்மையில் குடியரசு தினத்தை ஒட்டி தனது அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மன்சூர் அலிகான், தனது கட்சியின் பெயரை 'தமிழ் தேசிய' என்பதற்கு பதிலாக 'ஜனநாயக தேசியப் புலிகள்' என்று மாற்றுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் குப்பைகளை பெருக்கி, பாட்டு பாடி பேச்சை ஆரம்பித்த மன்சூர் அலிகானின் அட்டகாச வீடியோ  தற்போது வைரலாகியுள்ளது.


அதாவது, இந்த கட்சியின் முதலாவது மாநாடு அறிமுக கூட்டம் நேற்று சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வாக்கு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான நிலையில், மேடைக்கு பேச வந்த மன்சூர், அங்கு கிடந்த குப்பைகளை பார்த்து துடைப்பதைக் கொண்டு வர சொல்லி, அவரே கூட்டி சுத்தப்படுத்தி அதற்கு பின்னர் பாட்டு பாடி மைக் பிடித்து பேசியுள்ளார்.


மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மடிப்பிச்சை  எடுத்தாவது போட்டியிடுவேன், எளியவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதே எங்கள் நோக்கம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை தங்களது கட்சி நிர்வாகிகளிடம் கலந்துஆலோசித்து விட்டு தெரிவிப்போம், தமிழக மீனவர்களை இலங்கை துன்பப்படுத்துகிறது. 

இது போன்ற பிரச்சனைகளை எனது கட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என ஆவேசமாக பேசியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோக்கள் வைரலாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement