• Dec 05 2023

அட வஞ்சரம் வெளவ்வாலு மீனுதானா இது , தன்னந்தனிமையில் இனிமை காணும் மன்சூர் அலிகான்

stella / 1 month ago

Advertisement

Listen News!


நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார், அதனால் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.


அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார், பின்னர் திடீரென அரசியலுக்குள் குதித்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் தனிக் கட்சி தொடங்கினார், அதுவும் காணாமல் போனது.


இதன் பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த நிலையில் இவர் தற்பொழுது கடற்கரையில் குடையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அட வஞ்சரம் வெளவ்வாலு மீனுதானா இது , நினைவுகளுடன்பனையூர் கடற்கரை என்று பதிவிட்டுள்ளார். இந்தப புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement