• Sep 07 2026

குபேர வாசல் தேடி சென்ற மனோஜ்.. கனகா அம்மா போட்ட கண்டிஷன்.? குஷியில் விஜயா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சத்யாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. ஆனாலும், ரேகா தன்னுடைய தந்தை, தாய் இல்லையே என வருத்தப்படுகிறார்.

அதன் பின்பு, திருமணத்தை சடங்குகள் இன்றி நடத்த முற்படும்போது, "சடங்கு சம்பிரதாயங்களின்படியே நடத்துங்கள்" என்று விஜயா கூறுகிறார். அதற்கு காரணம், அப்போதுதான் சிந்தாமணி வந்து சேருவார் என்று திட்டம் போடுகிறார்.


அதன்படியே, சத்யா - ரேகாவுக்கு அனைவரும் நலங்கு வைத்து, சம்பிரதாயங்களின்படி திருமணச் சடங்குகளை நடத்துகின்றனர். அதில் விஜயாவும் சந்தோஷத்துடன் பங்கேற்கிறார்.

இன்னொரு பக்கம், மனோஜ் கனகா வீட்டுக்குச் செல்கிறார். அங்கு திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன்போது, "விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் வேண்டும். அதை கொடுப்பீர்களா?" என்று கேட்க, அவரும் உடனே, "என்னுடைய மகளை திருமணம் செய்த அடுத்த நொடியே 10 லட்சம் ரூபாய் தருகிறேன்" என்று நிபந்தனை விதிக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement