• May 19 2024

குயின்சியிடம் எல்லை மீறிய அசல் கோலாறைக் கண்டித்த மணிகண்டன்- ரெட் காட் கொடுத்து அனுப்புங்க சேர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் முக்கிய போட்டியாளராக் கலந்து கொண்டிருப்பவர் தான் கானாப் பாடகர் அசல் கோளாறு.இந்த நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களிடம்  இவர் கலந்து கொள்ளும் விதம் ரசிகர்களை எரிச்சல் மூட்டியுள்ளது.

பேசும் சாக்கில் பெண் போட்டியாளர்களை நெருங்கும் அசல், நைசாக அவர்களை தடவி சந்தோஷப்பட்டு வருகின்றார். அவர் செய்யும் சில்மிஷங்களை சிறுசிறு க்ளிப்பிங்காக வெட்டி சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


கடந்த 5 சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் வன்மம், ஆபாசமும் நிரம்பி வழிகிறது. பெண் போட்டியாளர்களை தடவி தடவி பார்த்த அசல் கோளாறு, பெண் போட்டியாளர்களுடன் ஒரே போர்வைக்குள் போய் படுப்பது, அவர்களிடம் ஆபாசமாக பேசுவது, அவர்களை கடிப்பது என எல்லை மீறி வருகிறார்.

இந்நிலையில் அசல் லீலையின் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் குயின்ஸி மீது காலை போட்டு படுத்திருக்கிறார் அசல் கோளாறு. இதனை பார்த்த மணிகண்டன், இப்படி குயின்ஸி மீது காலைப் போட்டிருக்கியே அவரின் பெற்றோர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? அவள் பெற்றோரிடம் சண்டைப் போட்டு இந்த வீட்டுக்குள் வந்துள்ளார் என்று கண்டிக்கிறார்.

ஆனால் அதற்கு, இதை பார்த்தால் எங்களை பெஸ்ட் ஃபிரண்ட்னு நினைப்பாங்க என்று அசால்ட்டாக கூறி கேவலமாக சிரிக்கிறார். அப்போதும் காலை எடுக்கவில்லை குயின்ஸி கூறியபோதும் காலை எடுக்காமல் மோசமாக நடந்து கொண்டார் அசல் கோளாறு. மேலும் பிளாஸ்மா முன்பு அமர்ந்திருக்கும் போதும் குயின்ஸி மற்றும் நிவாவை கடிக்கிறார்.


அசல் கோளாறின் சில்மிஷங்கள் அதிகரித்து வருவதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் என கொடி பிடிக்காத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை அங்குள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement