• Sep 21 2023

Super singer ஷோவிற்கு மீண்டும் வந்த பூவையார்.. கோகுலிற்கு மணி அண்ணா கொடுத்த Gift.. கண் கலங்கி அழுத அரங்கம்.. Promo video..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்கும், சிறு குழந்தைகள் கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, 8 சீசன்களை கடந்த நிலையில், தற்போது வெற்றிகரமான 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் பூவையாருடன் இணைந்து கோகுல் என்ற சிறுவன் "கலரு வேட்டி..." என்ற பாடலைப் பாடுகின்றார். பின்னர் பாண்ட் மாஸ்டர் மணி அவர்கள் கோகுலிற்கு ஷூ ஒன்றினை பரிசளிக்கின்றார். 


எதற்காக கோகுலிற்கு இந்த கிப்ட் கொடுத்தீர்கள் என கேட்ட கேள்விக்கு மணி அவர்கள் "நானும் ரொம்ப கஷ்டப்பட்டு வந்த ஒராள் தான், நான் ஷு முதன்முதலாக வேலைக்குப் போகும்போது தான் புதிதாகப் போட்டேன், அந்த ஷூவைப் போடும்போது எனக்கு ஒரு பெருமையாக இருந்திச்சு, அந்தப் பெருமையை அவனும் அடையட்டும் என்றுதான் இந்த ஷூவை நான் அவனுக்குக் கொடுத்தேன்" என்கிறார்.

இதனைக் கேட்டதும் அரங்கமே கண் கலங்கி அழுகின்றது. இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement

Advertisement