• May 02 2024

வைற் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் மாளவிகா…அடுத்த உலக அழகி இவங்க தான் போல…வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

குறைந்த திரையுலக அறிமுகத்தைக் கொண்டிருந்தாலும் தன்னுடைய திறமையினாலும், விடாமுயற்சியினலும் இன்று முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக முன்னேறியிருப்பவரே நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப் படங்களிலும் கலக்கி வருகின்றார்.

அதாவது மலையாளத்தில் பிரபல நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் உடன் இணைந்து நடித்து 'பட்டம் போலெ' என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் 2013 இல் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தினை தொடர்ந்து கன்னடத்திலும் கால் பதித்திருக்கின்றார் மாளவிகா மோகனன். அதாவது இவர் 'நிர்ணநாயகம்', 'தி கிரேட் பாதர்' என்ற மலையாள திரைப்படத்திலும், 'நானு மட்டு வரலக்ஷ்மி' என்ற கன்னட திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாது 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து 'மாஸ்டர்' திரைபடத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இவ்வாறாக இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருக்கின்றார்.

இன்றுவரை படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வரும் மாளவிகா மோகனன் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவை அவரது நடிப்பும், கவர்ச்சியான உடல் அழகும் மற்றும் போட்டோ ஷீட் என்பவையே ஆகும். இவையே இவரைத் திரையுலகின் பிரகாசமான ஓர் இடத்திற்குக் கொண்டு சென்றது.
மாடலிங்கான இவர் போட்டோ ஷீட் செய்வதிலும் மற்ற நடிகைகளைப் போலவே அலாதி பிரியம் கொண்டவர். இவர் போடுகிற போட்டோக்களை ரசிப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் ஒரு கூட்டம் உண்டு.

இந்த நிலையில் இவர் தற்போதும் வைற் நிற உடையணிந்து கவர்ச்சிகரமான போட்டோ ஷீட் நடத்தி இருக்கின்றார். அந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு அச்சு அசல் தேவதை போலவே இருக்காங்க. அதைப் பார்த்த நம்ம மாளவிகா ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அப்புகைப்படங்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement