• May 04 2024

கேவலமாக பேசிய மைனா - சிக்கிய வீடியோவால் திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி  தற்போது விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் ஆரம்பமாகிய  முதல் வாரத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை துரத்தி துரத்தி வரும் செயல் பலரையும் முகம் சுழிக்க வைத்து இருந்தது. பலமுறை ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் எடுத்துக்கூறியும் அவர் கேட்டதாக தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டரின் செயலுக்கு பலர் சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடந்தது. அப்போது, போட்டியாளர்கள் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு அமர்ந்து நேருக்கு நேராக நாமினேஷன் செய்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவாறு ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்தார் ரக்ஷிதா. ராபர்ட் விளையாடும் மன நிலையில் இல்லை என்ற அவர் இந்த வாரத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டு அவர் விளையாட வேண்டும், இல்லாவிட்டால் வெளியேற வேண்டும் என்று தடாலடியாக கூறினார். இதைக் கேட்டவுடன் ராபர்ட் மாஸ்டர் முகம் வாடிவிட்டது.

இவ்வாறுஇருக்கையில் , சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.மேலும் அந்த வீடியோவில், மைனா ரக்ஷிதாவை பற்றி சக போட்டியாளரான மணியிடம் பின்னால் பேசுகிறார்.

சரவணன்-மீனாட்சி படப்பிடிப்பில் நான் இதைப்போடக்கூடாது. அதை போடக்கூடாது. இது நல்லா இருக்காது.. அது நல்லா இருக்காதுன்னு ஏதாவது ஒன்னு சொல்லிக்கிட்டே இருப்பா... என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

எனினும் இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள் மைனா பேட்டி கொடுக்கும்போது ரக்ஷிதா என்னை நல்லா பாத்துக்குறாங்க.. என்னை மோடிவேஷன் செய்றாங்கன்னு சொல்லிட்டு.. இப்போ.. பின்னால் இப்படி பேசிக்கொண்டிருக்கிறேயே மைனா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். 




Advertisement

Advertisement

Advertisement