• May 02 2024

தோழிகளுடன் பர்த்டே கொண்டாடிய மகேஷ் பாபு மகள்.. கியூட் வைரல் வீடியோ..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபு சினிமா வாழ்க்கையை போலவே தனது குடும்ப வாழ்க்கையையும் சீராக கவனித்து வருகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் மகேஷ் பாபுவுக்கு கெளதம் மற்றும் சித்தாரா என இரு குழந்தைகள் உள்ளனர். தனது இளைய மகள் சித்தாரா கட்டிமேனியின் பிறந்தநாளை சமீபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடி உள்ளார் மகேஷ் பாபு.

மகேஷ் பாபு மகள்: சித்தாரா கட்டிமினேனி 11வது வயது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே சமீபத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று நடித்து அசத்தினார்.

பிஎம்ஜே ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் சித்தாரா நடிக்க அந்த விளம்பரத்தை அமெரிக்காவின் டைம் ஸ்கொயர் பில்போர்டுக்கே அந்த நிறுவனம் கொண்டு சென்று மிகப்பெரிய அங்கீகாரத்தை மகேஷ் பாபு மகளுக்கு சமீபத்தில் கொடுத்திருந்தது. மகேஷ் பாபுவே தனக்கு கூட இன்னும் அந்த இடத்தில் இடம் கிடைக்கவில்லை, என் மகளுக்கு கிடைத்திருக்கிறது என சந்தோஷப்பட்டு போஸ்ட் போட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழனன்று 11 வயது பிறந்தநாளை சித்தாரா கொண்டாடிய நிலையில், அந்த பர்த்டே பார்ட்டி போட்டோக்களும், நீச்சல் குளத்தில் தனது குட்டித் தோழிகளுடன் போட்ட ஆட்டங்களையும் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளார் சித்தாரா.

மகேஷ் பாபு ரசிகர்கள் பலரும் சித்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிய நிலையில், பல பிரபலங்களும் குட்டி இளவரசியை வாழ்த்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement