• May 04 2024

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாதவன்- அடடே... வேற லெவல் நீங்க ,குவியும் வாழ்த்துக்கள்

stella / 7 months ago

Advertisement

Listen News!


ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதையும் அந்த வழக்கில் தன்னை நிரபராதி என நிரூபிக்க அவர் போராடியதையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியிருந்த திரைப்படம் தான் ராக்கெட்ரி.இப்படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் ஜிடி நாயுடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் அஜய் தேவகன் மற்றும் ஜோதிகா நடிக்கும் படத்திலும் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாதவன் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார். மேட் இன் இந்தியா என்பதால் பெருமையுடன் ஐபோன் 15 போனை தான் வாங்கி இருப்பதாக மாதவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான ஐபோன் 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட போன் என்பது குறிப்பிடத்தக்கது. பல சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் ஐபோன் 15 போனை வாங்கி வருகின்றனர். வெளிநாடுகளை விட ஐபோன் 15 இந்தியாவில் அதிக விலையில் இருப்பதாக ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


 இந்தியாவில் ஐபோன் 15ன் விலை 79,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தனது தேசப்பற்றை காட்ட நடிகர் மாதவன் காஸ்ட்லி ஐபோன் எல்லாம் வாங்குறாரே என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement