• Jul 09 2025

இசை உலகின் ஒளியிழந்த நட்சத்திரம்...!பாடலாசிரியர் சிவ சக்தி தத்தா காலமானார்..!

Roshika / 15 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் பாடலாசிரியராக கலக்கி வந்த சிவ சக்தி தத்தா இன்று (ஜூலை 8, 2025) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு தெலுங்கு திரைப்படத் துறையையும் இந்திய சினிமா உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர், பிரபல இசையமைப்பாளர் மற்றும் ஆஸ்கார் விருது வென்ற M.M. கீரவாணியின் தந்தையாவார் . மேலும், திரைப்படக் கதை, திரைக்கதை எழுத்தாளராகும் விஜயேந்திர பிரசாதின் மூத்த சகோதரரும், பிரபல இயக்குநர் ராஜமௌலியின் மாமாவும் ஆவார்.


சிவ சக்தி தத்தா தெலுங்கு திரையுலகில் பாடலாசிரியராக மட்டுமல்ல, ஒரு தத்துவஞானியும், மொழிச் செழுமையை வார்த்தைகளில் வடித்தவனும் ஆவார். பாகுபலி , RRR, மகதீரா, ஸ்ரீ ராமதாசு, ராஜன்னா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் வீரவணக்கம் ஆகியவற்றின் அழகான கலவையாக இருந்தன. அவரது வரிகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல ஒவ்வொரு பாடலும் ஒரு வரலாறு, ஒவ்வொரு வரியும் ஒரு தத்துவத்தை சுமந்தது. அவர் எழுதிய பாடல்கள், ஒவ்வொரு ரசிகரின் இதயத்திலும் ஆழமாக பதிந்துவிட்டன.


இன்றைய இரவல் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவ சக்தி தத்தா இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் தெலுங்கு திரையுலகில் மீட்க முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது. திரைத்துறை நண்பர்கள், இசை ரசிகர்கள், இலக்கிய பிரேமிகள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். பல பிரபலங்கள் அவரது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் ராஜமௌலி, “அவர் என் முதல் கலைமாமா. என்னை எழுதச் தூண்டிய முதல் நபர். இன்று நான் இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் அவர். என் இதயம் உடைந்து விட்டது” என உருக்கமாகக் கூறியுள்ளார்.


சிவ சக்தி தத்தாவின் இறுதி சடங்கு இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், கலாசாரச் சொந்தங்கள் என ஏராளமானோர் அவரது இல்லத்திற்கு வந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் கலாச்சாரத்தை கௌரவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement