• May 07 2024

வசூலில் வாரி இறைக்கும் லவ்டுடே திரைப்படம்- தெலுங்கு சினிமாவில் முதல் வாரத்தில் இத்தனை கோடி பெற்றுள்ளதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் விரைவில் 100 கோடியை எட்டி விடும் என்று கூறப்படுகின்றது.


மேலும் தற்போது ஓடிடியில் லவ் டுடே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து இருக்கும் தில் ராஜு தான் லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்திருக்கிறார். இப்படத்தை பார்த்த இயக்குநர் அட்லி கூட படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் கூட எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வசூல் குவிந்திருந்தது. தற்போது முதல் வாரத்தில் 10.6 கோடியை விட அதிகமாக லவ் டுடே அங்கு வசூலித்து இருக்கிறதாம்.இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement