• Apr 27 2024

ஆண்டவரே நீங்க தான் விக்ரமனுக்கு ஜிங்ஜாங் தட்டுறீங்க- கமல்ஹாசனை மோசமாக விமர்சித்த ரவீந்தர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர். மேலும் நேற்றைய தினம் தனலக்ஷ்மி வெளியேற்றப்பட்டார்.தனலக்ஷ்மி சிறப்பாக விளையாடக் கூடிய போட்டியாளர் அவரை வெளியேற்றி விட்டனரே என ரசிகர்கள் புலம்பியும் வருகின்றனர்.

மேலும் பொதுவாக வார இறுதியில் வரும் கமல்ஹாசன் விக்ரமனுக்கு ஆதரவாகவே பேசி வருகின்றார். இது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பேசியிருக்கும் விடயம் வைரலாகி வருகின்றது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும் ஒருவர். 


அந்த வகையில் ரவீந்தர் கூறியிருப்பதாவது, நான் நல்லவன் என்பதை விளம்பரப்படுத்தியே கேம் விளையாடுகிறார் விக்ரமன். இந்த கேமுக்கு நல்லவரா, கெட்டவரா என்பது எல்லாம் தேவை இல்லை. வெற்றிக்கு தகுதியானவரா, இல்லையா என்பது தான் முக்கியம். மணிகண்டன் அசீம் இடையேயான நட்பை உடைக்க பார்க்கிறார் விக்ரமன். அதனால் தான் மணிகண்டனை ஜிங்ஜாக் என்கிறார் என்றார்.

எல்லா வாரமும் ஜிங்ஜாக் யார் செய்கிறார் என்று என்னை கேட்டால் கமல் சார் தான். சார், நீங்க தான் விக்ரமனுக்கு பயங்கரமாக ஜிங்ஜாக் பண்ணிக்கிட்டு இருக்கிறீர்கள். அதை 100 சதவீதம் செய்யாதீர்கள். நாங்கள் உங்களை மக்களின் பிரதிநிதியாக பார்க்கிறோம். கடந்த 5 சீசன்களில் செய்ததையே செய்யுங்கள். 5 சீசன்களில் அநியாயம் செய்தபோது எல்லாம் ஒன்னும் செய்யாமல் இந்த சீசனில் விக்ரமனுக்காக பொசுக்கு பொசுக்குனு நிறைய பண்றீங்க. நீங்கள் செய்வது எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது என ரவீந்தர் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.


கமல் பற்றி பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியிருப்பதாவது, முன்பெல்லாம் வார இறுதி நாட்கள் வந்தால் நீங்கள் பேசுவதை பார்க்க டிவி முன்பு அமர்ந்தோம். நியாயமாக பேசி வந்தீர்கள். ஆனால் இந்த சீசனில் இரண்டு வேலையை தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒன்று அசீமை விளாசுவது. இரண்டாவது விக்ரமனுக்கு ஜிங்ஜாக் தட்டுவது. தயவு செய்து இதை விட்டுவிடுங்கள் ஆண்டவரே என தெரிவித்துள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்களோ கமல், விக்ரமனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement