• Apr 25 2024

வாரிசு படத்திற்காக விஜய்யும்.. துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கிய சம்பளம்... அதிக தொகையைப் பெற்றது யார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் வருகிற 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' என இரு திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன.


அதுமட்டுமல்லாது 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் இருவரினதும் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகிறது. இதனாலேயோ என்னவோ இரு திரைப்படங்கள் மீதும் அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அத்தோடு வாரிசா, துணிவா சிறந்தது எனக் கூறிப் பல சரச்சைகளும் சமீபத்தில் எழுந்திருந்தன.


இந்நிலையில் தற்போது வாரிசு படத்திற்காக விஜய்யும், துணிவு படத்திற்காக அஜித்தும் வாங்கியுள்ள சம்பள விபரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் வாரிசு படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதே போல், துணிவு படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 70 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் அஜித்தை விட விஜய் கூடிய சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement