• May 03 2024

உங்கள் மறைவு நெடுந்துயரம் தருகின்றது- பிரபல பேச்சாளரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த கவிப் பேரரசு

stella / 1 year ago

Advertisement

Listen News!


சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாகி வருவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது பிரபலம் ஒருவர் இறந்த செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது பட்டிமன்ற நடுவராகவும் பேச்சாளராகவும் இருந்து வருபவர் தான் நெல்லை கண்ணன். 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர் எனலாம். இவரது முதல் மகனான சுரேஷ் கண்ணன் திரைப்பட இணை இயக்குநராகவும் எழுத்தாளருமாக உள்ளார்.


இரண்டாம் மகன் ஆறுமுகம் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளார். நெல்லை கண்ணன் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், 

"தமிழறிஞர்

நெல்லை கண்ணன் மறைவு

நெடுந்துயரம் தருகிறது

சங்க இலக்கியம் சாற்றியவர்

கம்பரைக் காட்டியவர்

பாரதியைப் போற்றியவர்

பாவேந்தரை ஏற்றியவர்

கண்ணதாசனை நாட்டியவர்

மறைந்துற்றார்

யார் அவர்போல்

பேசவல்லார்?

அவர்போன்ற

எள்ளல்மொழி வள்ளல்

இனி எவருளார்?

ஏங்குகிறேன்;

இரங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 


 

Advertisement

Advertisement

Advertisement