• May 19 2024

நாங்க தடை மீறி செயற்படல- வாடகைத் தாய் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்கி மற்றும் நயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஏழு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த தம்பதியினர் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்த கொண்டாட்டத்தில்  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் திருப்பதி கோயில் நயன்தாராவின் தாய்வீடு எனப் பல இடங்களுக்குச் சென்று வந்த இவர்கள் பின்பு ஹனிமூன் கொண்டாடுவதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர்.இது குறித்த புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருந்தது. இவர்களின் திருமண வீடியோவும் அண்மையில் வெளியாகியிருந்தது.


தொடர்ந்து இருவரும் தற்பொழுது தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் கடந்த 9ம் திகதி தமக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்திருந்தனர்.இவர்கள் திருமணம் நடந்து சில மாதங்களே ஆன நிலையில் வாடகைத் தாய் மூலம் தான் குழந்தையை பெற்றுக் கொண்டனர் என்று உறுதி செய்யப்பட்டது.

எனினும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். மேலும் கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்க வேண்டும் என்றும் இதற்கான சில விதிமுறைகள் உள்ளது என கூறப்பட்டது.


திருமணம் ஆன 4 மாதத்திலேயே இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டுள்ளதால், தடையை மீறி செயல்பட்டதாக பல தகவல்கள் பரவியது. மேலும் இது குறித்து விசாரிக்க தமிழக அரசு சார்பில் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஒருவேளை இவர்கள், தடையை மீறி செயல்பட்டிருந்தால் சிறை செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

இவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் விசாரணை செய்யப்பட்டதை தொடர்ந்து, நயன்தாரா - விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடந்துள்ளது. அப்போது இவர்கள் விசாரணை குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் கடந்த டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெறும் முறை ஒப்பந்த பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறி வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.


Advertisement

Advertisement