• May 06 2024

நடிகர் விஜய் போல முன்னுக்கு முடியை விட்டு மாஸ் காட்டிய லெஜண்ட் சரவணன்- இணையத்தில் வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

ராஷ்மிகா தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி போல தானும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை லெஜண்ட் சரவணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கவர்ந்த முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.


படம் குறித்த அப்டேட்டுக்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அத்தோடு படத்தில் நடிக்கும் பிரபலங்களின் புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் நேற்றைய தினம்  ராஷ்மிகா தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதனை அடுத்து குஷ்பு சரத்குமார் மற்றும் பிரபுவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.இவை இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் விஜய் ராஷ்மிகாவுடன் எடுத்த செல்பி அந்த புகைப்படத்திற்கு போட்டியாக தற்போது லெஜண்ட் சரவணன் தனது போட்டோவை களமிறக்கி இருக்கிறார்.


அதாவது  விஜய் போல அவரும் முன்னால் மூன்று முடியை தோங்கவிட்டு போஸ் கொடுத்திருக்கிறார் லெஜண்ட். மேலும் அந்த புகைப்படம் தி லெஜண்ட் பட ஷூட்டிங்கில் எடுத்தது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement