• May 04 2024

இணையத்தில் லீக்கான 'வாரிசு' படப் பாடல்... அதிர்ச்சியில் படக்குழுவினர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' படம் உருவாகி வருகின்றது.  இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார்.

தில் ராஜு பிரமாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார்.


இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விஜய், ராஷ்மிகா நடிக்கும் பாடல்காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இது முடிந்த உடன் வாரிசு பட ஷூட்டிங் முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வாரிசு படத்தை வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே படக்குழுவினரிடமிருந்து அறிவிப்பு வெளியானது.


இதற்கான வேலைகளும் ஒருபுறம் படு பிசியாக நடந்து வருகிறது. மறுபுறம் இப்படத்தின் அப்டேட்டும் தீபாவளி முதல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் ஒருசில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது. அதாவது விஜய்யும், ராஷ்மிகாவும் ஜோடியாக ஆடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன.

மேலும் "ரஞ்சிதமே... ரஞ்சிதமே" என தொடங்கும் அந்த பாடல் விஜய்யின் குரலில் உருவாகி உள்ளது. இப்பாடலைத் தான் தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் திருட்டுத்தனமாக அதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


இதனால் படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளனராம். அதுமட்டுமல்லாது லீக்கான அந்த வீடியோவை நீக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement