• May 20 2024

இந்த படமே கடைசி…ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் நடிகராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின். எம். ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக களமிறங்கினார்.

அதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்.இதன்பின், ஹகமத் இயக்கத்தில் வெளிவந்த மனிதன் திரைப்படம், உதயநிதி திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. எனினும் இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு உதயநிதி நடிப்பில் வெளிவந்த சைக்கோ ரசிகர்களிடத்தே சூப்பர்ஹிட்டானது.

மேலும், தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகின்றது. இப்படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் படத்தில் நடிக்கிறார் உதயநிதி.

இந்நிலையில், இப்படத்திற்கு பின்னர், தான் நடிப்பில் இருந்து விலகப்போவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அரசியலில் முழு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலக போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement