• May 08 2024

சேனாபதி லுக்கிற்கு மாறும் முன் முறுக்கு மீசையுடன் கமல் எடுத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் இந்தியன் ஏ.‌எம். ரத்னம் தயாரிப்பில்  உருவான இப்படம் வேற லெவலில் வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.


இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர்,  அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர் அனிருத்  இசையமைக்கின்றார். முதற்கட்டப்படப்பிடிப்பானது கடந்த 2019 ஜனவரி மாதம் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் & கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளனர். 


இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில் அம்ரிதா ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் சேனாபதி லுக்கிற்கு மாறும் முன் முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படமாக இந்த BTS அமைந்துள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement