பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் கோமதியைப் பார்த்து மூத்த அண்ணாவ ஒருக்கா பார்த்திட்டு வந்திடு என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். மேலும் இந்த மாதிரியான நேரத்தில நீங்க பார்த்திட்டு வந்தால் அவரோட மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும் என்கிறார். பின் கோமதி தானும் அதை நினைத்தேன் போய்ட்டு வறேன் என்கிறார்.

அதைத் தொடர்ந்து கோமதியும் ராஜியும் முத்துவேலைப் பார்க்கிறதுக்காக வீட்டுக்குப் போகிறார்கள். பின் ராஜி முத்துவேலைப் பார்த்த உடனே கண்கலங்கிறார். அதைப் பார்த்த முத்துவேல் IPS ஆகப்போற பொண்ணு தைரியமா இருக்கணும் என்கிறார். அந்த நேரம் பார்த்து குமார் அங்க வந்து நிக்கிறார். பின் ராஜி முத்துவேலோட கதைக்கிறதைப் பார்த்த உடனே குமார் கோபப்படுறார்.
அதைத் தொடர்ந்து ராஜி முத்துவேலை வெளியில வாக்கிங் கூட்டிக்கொண்டு போறார். அதைப் பார்த்த பாண்டியனும் முத்துவேல் கிட்ட போய் உடம்பு எப்புடி இருக்கு என்று விசாரிக்கிறார். மேலும், உங்க உடம்பு கூடிய சீக்கிரம் சரியாகிடும் தைரியமா இருங்க என்கிறார் பாண்டியன். அதையும் முத்துவேல் எதுவுமே கதைக்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இதுதான், இன்றைய எபிசொட்.
Listen News!