• May 04 2024

குக்வித் கோமாளி சுனிதாவின் அக்காவா இது...வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சுனிதா. 



இதனைத் தொடர்ந்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்டதன் மூலமே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து கொண்டார்.நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் கதாநாயகியின் பள்ளிவயது தோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் சுனிதா.



 இவரின் உழைப்பும், விடா முயற்சியும், தொழில் பக்திதான் என்கிறார்கள் சுனிதாவுக்கு நெருக்கமானவர்கள். தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் பிஸியாக வீடியோக்களை வெளியிட்டு வரும் வாடிக்கையையும் வைத்துள்ளார்.

வட இந்தியாவில் இருந்து தமிழ் பேசத்தெரியாமல் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் சுனிதாவின் சகோதரியின் பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை அக்காவின் புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement