மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோவாக திகழ்ந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக மைம் கோபி பெற்றார். இரண்டாவது இடத்தை விசித்திராவும் மூன்றாவது இடத்தை சிருஷ்டி டாங்கே, பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து ஷிவாங்கி லைவ்வில் பேசியிருந்தார். அத்தோடு எல்லோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து சிருஷ்டி டாங்கே தற்பொழுது லைவ்வில் பேசி இருக்கின்றார்.
அதாவது குக்வித் கோமாளி செட்டையே ரொம்ப மிஸ் பண்றேன். அங்க இருக்கும் போது டைம் போறதே தெரியாது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். குக்வித் கோமாளி செட்ல எல்லோரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். இவங்கள மட்டும் தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது எல்லோருமே ரொம்ப ஜாலியாக இருப்பாங்க என்றார்.
தொடர்ந்து பேசிய இவர் செட்டுக்கு புகழ் வந்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும் அவர் வந்தாலே டைம்போறதே தெரியாது. சமையல் ஒழுங்காகத் தெரியாமல் போனேன் இப்போ நல்லா பழகிட்டேன். இந்தியன் உணவுகள் சமைக்க பழகிட்டேன். அதுவே கத்துக்கிட்டேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.இனிமேல் நான் படத்தில நடிக்கிறதில தான் கவனம் செலுத்தப் போகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!