• May 09 2024

தாம் தக்க தையத்தக்க பாடலுக்கு லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து குத்தாட்டம் போட்ட கே.பி.வை பாலா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம், ருத்ரன்.  இந்த படத்தை 5 ஸ்டார் கிரியேஷன் நிறுவனர் கதிரேசன் இயக்கியுள்ளார்.

 மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே கடந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.


இதை தொடர்ந்து, விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட் வெளியிட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகிறது படக்குழு. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற, மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடந்து. அந்த நிகழ்வில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காமெடி நடிகர் பாலாவும் சேர்ந்து திருமலை படத்தில் இடம் பெற்ற தாம் தக்க தையத்தக்க பாடலுக்கு இணைந்து நடனமாடியுள்ளனர். இது குறித்த வீடியோவை  பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement