• May 19 2024

தமிழின் மரியாதையைக் காப்பாற்ற கோதை எடுத்த முடிவு- தாலியைக் கழட்டிக் கொடுத்த சரஸ்வதி- Thamizhum Saraswathiyum Promo

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழின் கம்பெனி எரிந்து நாசமாகி விட்டது. இதனால் தமிழ் தன்னுடைய கம்பெனியை எப்படி மீட்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது அதிகமாகக் காணப்படுகின்றது.

இப்படியான நிலையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தமிழ் கோதையிடம் சென்று மடியில் படுத்துக்கொள்ள்டுமா என்று கேட்க,கோதையும் சந்தோஷப்பட்டு தமிழை மடியில் கிடத்துகின்றார்.


தொடர்ந்து தமிழ் ஒரு கம்பெனியின் லோன் கேட்டுப் போய் நிற்கின்றார். அங்கு அவர்கள் லோன் தரமுடியாது என்று சொன்ன காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்க சரஸ்வதி, கோதை எல்லோரும் தாலியைக் கழட்டிக் கொடுத்து கம்பெனி வேர்க்கர்ஸிற்கு சம்பளம் கொடுக்கச் சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement