• May 06 2024

முத்தம் மட்டும் போதாது; ஒரு படி மேலே சென்ற எமி ஜாக்சன்; கிழு கிழு புகைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த காதல் ஜோடி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'மதராசப்பட்டினம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த 'ஐ' என்ற படத்தில் அழகு மாடலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார் எமி ஜாக்சன்.


இதன் பின்பு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த '2.0' என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படத்தையடுத்து இவர் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்குவார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அந்த படத்துடன் சினிமா நடிப்புக்கே ஒரு பெரிய பிரேக் கொடுக்கும் விதமாக ஜார்ஜ் பன்னாயுட்டு எனும் தொழிலதிபரை தன்னுடைய பார்ட்னராக ஆக்கிக் கொண்டு மீண்டும் லண்டனில் செட்டில் ஆனார் எமி ஜாக்சன்.


இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பன்னாயுட்டுவை நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து கொண்டு திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்க்கை நடத்தி வந்த எமி ஜாக்சன் அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். அக் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்தமை தொட்டு முதல் பிறந்தநாள் வரை அனைத்தையும் கணவருடன் கொண்டாடினார். 


ஆனால், அதன் பின்னர் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு ஏற்பட இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து அமெரிக்க நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வரும் எமி ஜாக்சன் தனது காதலருடன் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்.


இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை லிப் லாக் முத்தம் கொடுக்கும் ரொமாண்டிக் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்களின் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் நடிகை எமி ஜாக்சனும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதாவது மற்ற நடிகர், நடிகைகளைப் போல் அல்லாது ஒரு ஸ்டெப் மேலே சென்று காதலரின் நாக்குடன் தனது நாக்கு உரசும் செம ரொமான்டிக்கான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார். இவர் வெளியிட்ட இந்தப் புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement