கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு எனப் பல மொழிகளிலும் இடம்பெற்று வருகின்றது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியானது விரைவில் ஆரம்பமான நிலையில், பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 சமீபத்தில் ஆரம்பமானது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் தெலுங்கு நடிகர் சிவாஜி, ஷகிலா, நடிகை கிரண், பிரியங்கா ஜெயின், பாடகி தாமினி பட்லா உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் டாஸ்க்கில் கிரண் இன்னொரு போட்டியாளர்களுடன் மல்யுத்தம் செய்வது போன்ற போட்டி இடம்பெற்றது. அதில் கிரண் சக போட்டியாளரிடம் இருந்தும் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே மான் கராத்தே போட்டு வந்தார். இறுதியில் கிரணை தாக்க வந்த பெண் போட்டியாளர் குறிப்பிட்ட கோட்டில் இருந்து வெளியேறி விட்டார்.
இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது கிரணின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் கிரண் நிலைத்திருப்பதற்காக ரசிகர்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ..!
Listen News!