• May 18 2024

நடிகையானதும் குஷ்பூ மகள் செய்த செயல்– இப்படியுமா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. உண்மையிலேயே குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான் என்பதாகும். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் என்றி கொடுத்தார்.இதன்  பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும்.இதன் பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார்.

குஷ்பு கடந்த 2000ஆம் ஆண்டு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்பூவும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள்.மேலும் இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இருப்பினும் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்களை செய்தார்கள். அவ்வாரான கிண்டல்களுக்கு குஷ்புவும் பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.

அத்தோடு குஷ்பூவின் மகள்களின் உருவத்தை கேலி செய்து வந்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சமீபத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய இருந்தார். மேலும் அந்த புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதே போல குஷ்பூவின் மற்றொரு மகளான அவந்திகாவும் உடல் எடையை குறைத்து இருந்தார்.அத்தோடு இவர்கள் இருவருக்கும் போட்டி போடும் வகையில் குஷ்பூவும் உடல் எடையை குறைத்தார்.



இவ்வாறான ஒரு நிலையில் குஷ்பூவின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை. குஷ்பூவின் மூத்த மகளான அவந்திகா தான் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அவந்திகா லண்டனில்  நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்த நிலையில் தற்போது அவர் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இதனால் அவர் சமூக வலைதளத்தில் கூட தலைகாண்பிக்காமல் இருந்து வருகிறாராம்.



குஷ்பூவின் மூத்த மகளை போல இளைய மகளும் உடல் எடையை குறைத்து இருந்தார். அத்தோடு இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூட  கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுத்த அனந்திதா ஒரு 16 வயசு பொண்ண ஆப்ரேஷன் செய்துகொள்வாரா இது கூடவா தெரியாது’ என்று கூறி இருந்தார். இந்நிலையில் தற்போது குஷ்பு இன்ஸ்டாகிராமில் அவரது மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.அதில் டாட்டு குத்தி ஆளே மாறிப்போய் உள்ளார்.




Advertisement

Advertisement