• May 19 2024

விரைவில் டிவி-இல் ஒளிபரப்பாகும் KGF-2…மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் KGF. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் வெளியாகியது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகியது. உலகம் முழுவதும் 1000ற்கு மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியானது

இத்திரைப்படத்தில் கனடா நடிகர் யாஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.மேலும் பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ், திராவிடன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

100 கோடி ரூபாய் பட்ஜட்டில் உருவான இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் 1.96 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து நான்கு வாரத்தில் ரூபா 1155 கோடிகள் வசூல் செய்து பிரம்மாண்டமான சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில் KGF பாகம் பலமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விட்டது. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்றே சொல்லலாம். அந்தவகையில், தற்போது இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.இதன் இரண்டாம் பாகம் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஆனால் அப்போது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement