• May 07 2024

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் கண்ணி வெடி திரைப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பம்- விஜய் டிவியின் இந்த நடிகரும் நடிக்கிறாரா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில்  தெலுங்கில் வெளியான தசரா மற்றும் தமிழில் வெளியான 'மாமன்னன் ' ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.


குறிப்பாக 'மாமன்னன்' படத்தில் இதற்கு முன், ஏற்று நடித்திராத கம்யூனிசம் பேசும் பெண் கதாபாத்திரத்தில் கொஞ்சம் அதிரடியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து பாராட்டுக்களும் குவிந்து வந்தது.


இதைதொடர்ந்து, தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழில் கதையின் நாயகியாக நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. 'கண்ணிவெடி' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை,இயக்குநர் கணேஷ் ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.

இந்த படத்தில் நமீதா கிருஷ்ணா மூர்த்தி, விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






Advertisement

Advertisement

Advertisement