• May 05 2024

தசரா படக்குழுவினருக்கு தங்கக் காசுகளை பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்- அதுவும் எத்தனை பேருக்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் கைவசம் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகுதாதா ஆகிய படங்களும், தெலுங்கில் தசரா, போலா சங்கர் ஆகிய படங்களும் உள்ளன.

இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆக உள்ளது.


இதுதவிர கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.


தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தசரா' திரைப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினர் 130 பேருக்கு 70லட்சம் மதிப்புள்ள தங்க காசுகளை பரிசாக வழங்கியுள்ளார்.இதனால் கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement