தமிழ் சினிமாவில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். இவருக்கு ரஜினி முருகன் படம் மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தெலுங்கில் மகாநடி படத்தில் நடித்து மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அதற்குப் பிறகு வாய்ப்புகள் இன்றி தடுமாறிக் கொண்டிருந்தபோது அவருக்கு மாமன்னன் திரைப்படம் நல்லதொரு ரீ என்ட்ரியாக அமைந்தது.
அதேபோல பாலிவுட்டில் தெறி படத்தின் ஹிந்தி ரீமைக்கான பேபி ஜான் படத்தில் நடித்தார். அந்த படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே அவருடைய காதல் திருமணம் உறுதியானது. திருமணத்திற்கு பிறகும் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார் கீர்த்தி சுரேஷ்.

கடந்த நவம்பர் மாதம் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஜே.கே சந்துரு இயக்கியுள்ளார். ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவருடன் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளதுடன் அதில் அவர் கருப்பு நிற ஆடையில் கண் கவரும் வகையில் காணப்பட்டுள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
Listen News!